மன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 01:41 pm
delhi-finance-minister-nirmala-sitharaman-met-former-pm-dr-manmohan-singh-at-his-residence

தற்போதைய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருகிற ஜூலை 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதை அடுத்து, இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் 17ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, வருகிற ஜூலை 5ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் முறையாக,  இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சமீபத்தில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வருகிற ஜூலை 5ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், நிதி அமைச்சருமான மன்மோகன் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close