விமானப்படை விமான விபத்து- மீட்பு குழுவினர் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்!

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jun, 2019 01:15 pm
iaf-airlifts-stranded-rescue-team-from-an-32-crash-site

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளான விமானப்படை வீரர்களின் உடல்களை மீட்க சென்ற மீட்பு குழுவினர் 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந் தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு புறப்பட்டது. 

இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்ட எல்லைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை அதிகாரிகள் உள்பட 13 வீரர்களும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக 8 நாட்களுக்கு பின்னரே விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இறந்தவர்களின் உடல்களை மீட்க 15 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விபத்து நிகழந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த குழுவில் 8 விமானப்படை வீரர்கள், 4 ராணுவத்தினர் மற்றும் 3 மலையேறும் குழுவினர் இடம் பெற்றிருந்தனர்.

அவர்கள் விமானத்தின் கறுப்பு பெட்டி மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்தனர். இந்நிலையில் கடந்த 17 நாட்களாக மீட்பு குழுவினரை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மோசமான வானிலையால் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்தில் இறங்க முடியாத சூழல் நிலவந்தது.

இந்நிலையில் நேற்று விமானப்படையின் அதிநவீன ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் 15 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக விமானப்படை அதிகாரி ரத்னாகர் தகவல் வெளியிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close