இன்று சூரிய கிரகணம்! நம்மை பாதுகாத்து கொள்வதற்கு சில டிப்ஸ்!!

  சாரா   | Last Modified : 26 Dec, 2019 07:49 am
solar-eclipse-2019-date-timings-and-tips-to-take-care

இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நிகழ உள்ளது. டிசம்பர் 26ம் தேதி நிகழ இருக்கின்ற இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும்.

சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது ஏற்படுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் போது உணவு உண்ணக்கூடாது என்றும் தண்ணீர் அருந்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காந்த அலைகள் மற்றும் புறஊதாகதிர்கள் நம்மை தாக்ககூடும் என இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் போதுமான தண்ணீர் அருந்திவிட வேண்டும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்காளால் பார்க்க கூடாது. காரணம் மற்ற நாட்களை விட கிரகணத்தன்று சூரியனின் தாக்கம் அதிகரித்து காணப்படும், இதனால் கண் பாதிப்பு பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close