ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 04:18 pm
bill-to-extend-president-s-rule-in-jammu-and-kashmir-in-rajya-sabha

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிப்பதற்கான மசோதாவை கடந்த ஜூன் 28ம் தேதி(வெள்ளிக்கிழமை)  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது  மசோதாவின் முக்கியத்துவம் குறித்து பேசிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு முழுக்க முழுக்க ஜவஹர்லால் நேரு தான் காரணம் என்றும் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஜம்மும- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பான இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close