நீர் நிலைகளை பாதுகாக்க புதிய திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 04:39 pm
jalasakthi-abhiyan-project-to-protect-water-levels

நாடு முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்க  ‘ஜலசக்தி அபியான்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

மேலும், ‘257 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அலுவலர், தொழில்நுட்ப அதிகாரி நியமிக்கப்படுவர். நீர்நிலைகளின் அளவை கண்காணிக்க முப்பரிமாண படம் முறைகள் உருவாக்கப்படும். பழைய நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். நீர் மறுசுழற்சி திட்டம் மற்றும் விரைந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close