ஜம்மு - காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு இந்த ஆட்சி தான் !

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 08:34 pm
president-rule-will-be-extended-six-months-more-in-jammu-and-kashmir

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி புதன்கிழமையுடன் (ஜூலை 3) முடிவடைய இருந்தது. இந்த நிலையில், அங்கு மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியே அமலில் இருக்க வேண்டும் எனக் கோரி, மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தீர்மானம், நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. 

இதைத்தொடர்ந்து, மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் இன்று இத்தீர்மானத்தை கொண்டு வந்தார். அங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், நாளை மறுநாள் முதல் (ஜூலை 3)  மேலும் 6 மாதங்களுக்கு  குடியரசுத் தலைவர் ஆட்சி  அமல்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close