பண்டிட்களை காஷ்மீருக்கு திரும்ப அழைத்து வந்தே தீருவோம் : அமித் ஷா சபதம்!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 10:03 pm
modi-govt-committed-to-bringing-kashmiri-pandits-back-to-valley-amit-shah

தங்களது சொந்த மாநிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக அடித்து விரட்ட பண்டிட்களை,  ஜம்மு -காஷ்மீருக்கு திரும்ப அழைத்து வந்தே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பான மத்திய அரசின் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் கலாசாரத்தை காக்கும் சீரிய பணியை மேற்கொண்டு வந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது சொந்த மண்ணான காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களது வழிப்பாட்டு தலங்கள்கூட அடித்து நொறுக்கப்பட்டன.

இதேபோன்று, ஹிந்து, முஸ்லீம் ஒன்றுமையை வலியுறுத்தி வந்த சூஃபி  சமூகத்தினரும் ஜம்மு -காஷ்மீரிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். இவ்விரு இனத்தவரையும்,  அவர்களது சொந்த மண்ணான ஜம்மு -காஷ்மீருக்கு திரும்ப அழைத்து வரும் நேரம் வந்துவிட்டது. இப்பணியை மத்திய பாஜக அரசு செவ்வனே செய்து முடிக்கும் என்று அமித் ஷா உறுதிபட தெரிவித்தார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் பிராமணர்கள் என அழைக்கப்படும் பண்டிட்கள் மீது, முஸ்லிம் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கடந்த 1989 -90 -ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கான பண்டிட்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கோர் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close