வங்கி மோசடி வழக்கு- நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jul, 2019 02:31 pm
cbi-carries-out-special-operation-against-banking-fraud-accused

வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 18 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள், குற்றச்சாட்டப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் ஆகிய இடங்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோசடி தொடர்பாக, பல நிறுவனங்கள், அதன் இயக்குனர்கள், வங்கி அதிகாரிகள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close