10 ஆண்டுகளில் இல்லாத கனமழை: தண்ணீரில் மிதக்கும் மும்பை!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 04:36 pm
heavy-rain-in-10-years-mumbai-floating-in-the-water

மும்பை சாண்டா க்ரூஸ் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும், மும்பை நகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து 5-ஆவது நாளாக நீடித்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கை முழுவதுமே முடங்கிவிட்டது என்று கூறக்கூடிய வகையில் மழை மும்பை மக்களை பாதித்துள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையால் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close