அம்மாவுக்காக 'வான்ட்டடா' ரயிலை நிறுத்திய பாசக்கார மகன்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 07:05 pm
mathura-man-pulls-chain-at-railway-station-to-let-mother-finish-her-breakfast

டெல்லியைச் சேர்ந்த 32 வயது வாலிபரான மணீஷ் அரோரா, ஹபிப்கஞ்ச் சதாப்தி விரைவு ரயிலில், டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவுக்கு பயணித்துள்ளார்.

மதுரா ரயில் நிலையத்தை அடைந்தபோதுதான், ரயிலில் உடன் வந்த தனது அம்மா, காலை டிஃபனை இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை என்பதும், டிஃபனை பாதியிலேயே முடித்து கொண்டு, ரயிலை விட்டு இறங்கினால் சரியாக இருக்காது எனவும் எண்ணிய அரோரா, அவசரக் காலங்களில் ரயிலை நிறுத்தும் சங்கிலியை பிடித்து இழுத்து, மதுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதனால் பதறிபோன ரயில்வே நிர்வாகம், என்னவென்று விசாரித்தபோதுதான் பாசக்கார மகனின் இச்செயல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அரோரா மீது வழக்குப்பதிவு செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close