தயவுசெஞ்சு என்ன விட்டிடுங்க... மீண்டும் கையெடுத்து கும்பிடும் ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 03:53 pm
i-am-no-longer-congress-chief-party-must-choose-president-soon-rahul

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். 

ராகுல் தமது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வந்ததுடன், தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதென்ற தமது முடிவை ராகுல் காந்தி திரும்ப பெற்றுவிட்டதாக இன்று  காலை தகவல்கள் வெளியாகின.

இதனை ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அத்துடன், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை தான் ஏற்கெனவே அளித்துவிட்டதாகவும், இனி தாம் காங்கிரஸ் தலைவர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், காங்கிரஸ் காரிய கமிட்டி உடனே கூடி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close