ஆர்.எஸ்.எஸ் அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 12:10 pm
rss-defamation-case-mumbai-court-gives-bail-for-rahul-gandhi

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், ரூ. 15,000 உத்தரவாத தொகை செலுத்துமாறு உத்தரவிட்டு ராகுல் காந்திக்கு மும்பை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. 

கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்கள் இதுபோன்று அடிக்கப்படுவார்கள்; கொல்லப்படுவார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த திருதிமான் ஜோஷி என்பவர் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, வழக்கின் இன்றைய விசாரணைக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், ரூ.15,000 உத்தரவாத தொகையுடன் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close