பட்ஜெட் 2019: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!

  முத்துமாரி   | Last Modified : 04 Jul, 2019 01:39 pm
economic-survey-2019-is-tabled-in-parliament-today

மக்களவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2ம் முறையாக பதவியேற்ற பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக நாளை (ஜூலை 5ம் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையடுத்து, மத்திய பட்ஜெட் முன்னோட்டத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. 

பொருளாதார ஆய்வறிக்கையில், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் கொண்டுவரப்படும் அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டிருக்கும். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "2019-20ம் ஆண்டில் ;ஜிடிபி' எனப்படும் 'நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்' 7 ஆக இருக்கும். நிதி பற்றாக்குறை 6.4% லிருந்து 5.8% ஆக குறைய வாய்ப்புள்ளது. பொருளாதார அளவு 2024ம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலராக இருக்கும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close