கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்! - அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 03:51 pm
minister-rajnath-singh-replied-for-kiranbedi-issue

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் குறித்து தான் பேசியதற்கு கிரண்பேடி தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தமிழர்கள் குறித்து மோசமாக விமர்சித்ததாக தமிழக எம்.பிக்கள் மக்களவையில் குரல் எழுப்பினர். மேலும் கிரண்பேடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். 'பொதுமக்கள் பார்வையிலே தான் கருத்து தெரிவித்ததாகவும்,  தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கிரண்பேடி கூறியதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close