சுங்கக் கட்டணத்தை பணமா கட்றவரா நீங்க.... அப்போ ஃபைன் கட்டவும் தயாரா இருங்க!

  கிரிதரன்   | Last Modified : 04 Jul, 2019 10:16 pm
get-ready-to-pay-penalty-for-making-cash-payment-at-toll-plazas

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை பணமாக செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வாகனங்களுக்கான அடிப்படை சுங்கக்கட்டணத்தில் 10 -20 சதவீதம் அபராதமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுங்கக் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை ஊக்கப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்  அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. சுங்கக்கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் திட்டம் 2014 -ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close