விரைவில் புதிய கல்விக் கொள்கை : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 07:52 pm
new-education-policy-soon

நாட்டின் கல்வி நிலையை இன்னும் மேம்படுத்தும் நோக்கில், புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்றும், தேசிய விளையாட்டுக் கல்வி ஆணையம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன் விளையாடு இந்தியா திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு முன், உலக அளவில் தலைசிறந்த 200 உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம் பெறவில்லை. ஆனால், இன்று இப்பட்டியலில் 3 உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டு மாணவர்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு வந்து படிக்கும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close