புறநானூறு பாடலை மேற்கோள்காட்டி அசத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 01:21 pm
tax-collection-fm-nirmala-qouted-poem-from-purananuru

நடப்பு நிதியாண்டுக்கான (2019 -20) பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து,மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்  தற்போது உரையாற்றி வருகிறார். இதில், வரி வருவாய் குறித்து அவர் பேசும்போது, சங்க தமிழ் இலக்கியமான புறநானூறில் இருந்து பாடல் ஒன்றை மேற்கோள்காட்டினார்.  

ஒரு மன்னன் , தன் நாட்டு மக்களிடம் எவ்வாறு வரி வசூல் செய்ய வேண்டும் என்று, அறிவுரை கூறும்படியாக அமைந்துள்ள "யானை புகுந்த நிலம்" எனத் தொடங்கும் அப்பாடலை, நிதியமைச்சர் அவையில் வாசித்து அசத்தினார். அப்பாடல், பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்காக, புலவர் பிசிராந்தையார் பாடியது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இப்பேச்சை கேட்டு தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் வியப்பில் ஆழ்ந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, நாட்டின் வரி வருவாய் 6.3 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 11.37 லட்சம்  ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த  ஐந்து ஆண்டுகளில் நாட்டின் நேரடி வரி வருவாய் 78 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close