'பசுமையான பட்ஜெட்' - நிர்மலாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 03:16 pm
pm-modi-congratulates-sitharaman-on-budget-calls-it-green-budget

புதிய இந்தியாவை உருவாக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

2019 - 20ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து பேசும்போது, “சுற்றுச்சூழலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இது ’பசுமையான பட்ஜெட்’. மேலும், இந்த பட்ஜெட் புதிய இந்தியாவை உருவாக்கும். கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

அதே போன்று இளைஞர்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டால் மத்திய வர்க்கத்தினர் அதிகம் பயனடைவார்கள். 

ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்” என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close