மும்பையில் விமான சேவை தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 05:52 pm
the-airline-began-service-in-mumbai

தொடர் கனமழையால் மூடப்பட்டிருந்த மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் திறக்கப்பட்டு, விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு கனத்த மழை கொட்டித்தீர்த்ததில், உயிரிழப்புகள், சாலை நீர்தேக்கம், ரயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு என மும்பை நகரமே ஸ்தம்பித்தது. தொடர்ந்து 5 நாட்களாக கொட்டிய மழையால் சாலைகள் எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால்  மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நீர்தேங்கியிருந்தது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டு, கடந்த திங்கள் கிழமை விமான நிலையம் மூடப்பட்டது. தரையிரங்கிய ஒரு விமானம் தேங்கியிருந்த நீரில் சிக்கியது. இதையடுத்து, மும்பைக்கான விமான நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  சேதங்கள் சீர்செய்யப்பட்ட நிலையில் மும்பை சத்ரபரி விமான நிலையம் திறக்கப்பட்டு,  விமான சேவை இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close