காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 01:04 pm
hizb-militant-killed-in-shopian-encounter

காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் நர்வானி(Narwani ) என்ற கிராமத்தின் அருகே தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்டவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close