மற்றொரு அவதூறு வழக்கிலும் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 03:06 pm
rahul-gets-bail-in-defamation-case

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி பாட்னா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில், ரூ.15,000 உத்தரவாத தொகை செலுத்துமாறு உத்தரவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை நீதிமன்றம் நேற்று முன்தினம், முன்ஜாமீன் வழங்கியது. 

இதைத் தொடர்ந்து, பாஜக தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கில், மும்பை பாட்னா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். இந்த வழக்கிலும் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

'திருடர்களின் பெயருக்கு பின்னால் எல்லாம் மோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது' என்று அவர் கூறியதாக வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close