மக்களை ஒன்று திரட்டி பாஜக குடும்பத்தினை வலுபெறச் செய்வோம்: பிரதமர் மோடி பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 05:48 pm
pm-launches-membership-drive-in-varanasi

பாஜக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தின் மூலமாக அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி பாஜக குடும்பத்தினை வலுபெறச் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இன்று காலை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். 

தொடர்ந்து, அவர் வாரணாசியில், பாஜகவில் உறுப்பினர்களை சேர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார். பா.ஜ.க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

கட்சியின் ஒவ்வொரு தலைவர்களும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் பாஜக உறுப்பினர் சேர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று இயக்கத்தை தொடக்கிவைத்து பேசினார். பாஜக உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் மூலமாக, அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி பாஜக குடும்பத்தினை வலுபெறச் செய்வோம் என்று குறிப்பிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close