பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்! முதல்வர் தொடங்கி வைத்தார்..

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:20 am
cameras-in-all-govt-schools-by-nov-kejriwal

டெல்லியில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்ச்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று தொடங்கி வைத்தனர். 

டெல்லி லாஜ்பாத் நகரில் உள்ள ஹேமு காலனி சர்வோதயா வித்யாலயா என்ற பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு அரசுப் பள்ளி முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் உள்ள பெருமையை இந்த பள்ளி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " இன்று இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இன்றைய குழந்தைகள்தான் எதிர்கால தலைவர்கள். அவ்வாறு, குழந்தைகள் படிக்கும் சூழல், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நமக்கு தெரியவேண்டும். எனவே தான் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது முயற்சித்துள்ளோம். தொடர்ந்து டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், இதற்காக தனி மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பெற்றோர்கள் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close