மகாராஷ்டிராவில் அணை உடைந்து வெள்ளம்: 23 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:35 am
maharastra-dam-collision-23-people-dead

மகாராஷ்டிர மாநிலத்தில் அணை உடைந்து ஏற்பட்டவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், ரத்னகிரியில் உள்ள அணை தொடர் கனமழையால் வேகமாக நிரம்பியது. இதையடுத்து, நேற்று அணையின் ஒரு பகுதி உடைந்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் அருகில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது. 

அப்பகுதியை சுற்றி உள்ள ஏழு கிராமங்களில் உள்ள மக்கள் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close