உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்; பிரதமர் மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:49 am
pink-city-jaipur-gets-unesco-world-heritage-tag

உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர் நகரம் இடம்பெற்றுள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

உலக பாரம்பரிய கமிட்டியின் 43வது மாநாடு அஜர்பைஜான் நாட்டில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் மாநில தலைநகரான பாரம்பரியமிக்க ஜெய்ப்பூர் நகரம் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்த்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரம்பரியமிக்க ஜெய்பூர் நகரம் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார். 

அதேபோல ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்,  இந்தியாவிற்கு இது மிகவும் பெருமைக்குரிய தருணம் என்றும் ராஜஸ்தான் தலைநகருக்கு கிடைத்துள்ள மற்றொரு பெருமை என்றும் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close