கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொடரும்: சித்த ராமையா உறுதி!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 12:58 pm
siddaramaiha-talks-about-karnataka-crisis

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்த ராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் தனங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து கூட்டணியில் சில குழப்பங்களும் நிலவி வந்தது. 

இதைத்தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில் சபாநாயகர் இல்லாத சமயத்தில், காங்கிரஸ் - ம.ஜ.த கட்சி எம் .எல்ஏக்கள் 12 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர்.

இன்னும் சில எம்.எல்.ஏக்கள் பதவி விலகும் பட்சத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி கலையும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்த ராமையா தெரிவித்துள்ளார். 

மேலும், "கர்நாடக அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் பாஜக உள்ளது; ஆனால், அதனால் கர்நாடக அரசுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். கட்சிக்கு விசுவாசமானவர்கள் எங்களது எம்.எல்.ஏக்க்கள்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close