ஆக்ரா பேருந்து விபத்து: 29 பேர் உயிரிழப்பு

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 08:37 am
up-29-dead-as-bus-falls-into-drain-on-yamuna-expressway

ஆக்ராவில் இரண்டு அடுக்கு பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

லக்னோவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்ற இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று, உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே விபத்துக்குள்ளானது. யமுனா அதிவிரைவு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து தடுப்புச்சுவர்களை உடைத்து கொண்டு கழிவு நீர் கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இதில், 29 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close