கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 12:48 pm
karnatka-crisis

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கமறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  நடந்து முடிந்த நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து கூட்டணியில் சில குழப்பங்களும் நிலவி வந்தது. 

இதைத்தொடர்ந்து, கடந்த 7ம் தேதி சபாநாயகர் இல்லாததால் காங்கிரஸ் - ம.ஜ.த கட்சி எம் .எல்ஏக்கள் 13 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர். 

மேலும் சில எம்.எல்.ஏக்கள் பதவி விலகும் பட்சத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி கலையும் சூழ்நிலை உருவாகும் என்று பேசப்பட்டு வருகிறது. 

இதன் தொடர் நிகழ்வாக சபாநாயகர் இன்று சட்டப்பேரவைக்கு வந்துள்ள நிலையில்,  எம்.எல்.ஏக்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கமறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலா 105 இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

12 எம்.எல்.ஏ.,க்கள் திடீர் ராஜினாமா: ஆட்சிக்கு ஆபத்து?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close