கர்நாடகா விவகாரம்: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

  முத்துமாரி   | Last Modified : 09 Jul, 2019 01:02 pm
karnataka-crisis-rajya-sabha-adjourned

கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பிக்களின் கோரிக்கையை அவைத் தலைவர் நிராகரித்ததால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் 13 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏக்கள் 10 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் அடங்குவர். இவர்களின் ராஜினாமா மனுக்கள் ஏற்கப்படுமா? இல்லையா? என்பது இன்று தெரியவரும். 

இந்த நிலையில், கர்நாடக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். 

ஆனால், அவைத்தலைவர் இதனை மறுக்கவே, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். பின்னர் தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close