எம்.எல்.ஏக்கள் நேரில் விளக்கம் அளித்தால் ராஜினாமா பரிசீலனை : சபாநாயகர்!

  முத்துமாரி   | Last Modified : 09 Jul, 2019 01:28 pm
karnataka-speaker-replied-for-mlas-resignation

ராஜினாமா கடிதங்களை அளித்துள்ள எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால், அவர்களுடைய ராஜினாமா கடிதங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று  கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் 13 பேர் அவர்களுடைய ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏக்கள் 10 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் அடங்குவர்.

விடுமுறை முடிந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் இன்று பேரவைக்கு  திரும்பியுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து பதில் அளித்துள்ளார். 

அதன்படி, தான் இல்லாத நேரத்தில் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளதால் அதனை பரிசீலனை செய்ய முடியாது என்றும், ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ள எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலும் என்று ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close