எம்.எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்க: சபாநாயகரிடம் சித்தராமையா வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 01:39 pm
siddaramaiah-gives-letter-to-speaker-for-disqualifying-the-mlas

ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரையும்  தகுதி நீக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்து சித்தராமையா இன்று கடிதம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் 13 பேர் கடந்த 7ம் தேதி தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏக்கள் 10 பேர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் அடங்குவர்.

விடுமுறை முடிந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் இன்று பேரவைக்கு  திரும்பியுள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே அவற்றின் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே இன்று பெங்களூருவில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

அதன்படி, சற்றுமுன் சித்தராமையா, சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து அதற்குரிய கடிதத்தை அளித்துள்ளார்.

மேலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும்  சபாநாயகருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளினால் கர்நாடக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close