காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகா ஒப்புதல்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 06:31 pm
karnataka-sanction-to-open-water-from-kaveri

தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர்  குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணயத்திடம் கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்த வேண்டுமெனவும் முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவின் மாண்டியாவுக்கும், தமிழகத்திற்கும் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்போது, மாண்டியா விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close