கர்நாடக சட்டப்பேரவை முன்பாக பாஜக எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 11:24 am
karnataka-crisis-bjp-mlas-protest-against-cm

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்- மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தலைமை தாங்குகிறார். 

முன்னதாக,  தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

newstm.in

சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close