அமைச்சரின் வீட்டில் நண்டுகளை விட்டு நூதன போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 12:52 pm
crabs-crawl-in-minister-s-society-as-ncp-protests

அணை உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம் என்று கூறிய அமைச்சரின் வீட்டில் நண்டுகளை விட்டு தேசியவாத  காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் திவாரே அணை நிரம்பியது. மேலும், அதிகளவு தண்ணீர் நிரம்பி வழிந்த காரணத்தினால் அணையின் ஒரு பகுதி உடைந்து அருகில் இருந்த கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இந்த வெள்ளபெருக்கில் 18 பேர் பலியாகினர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த், அணையில் இருந்த நண்டுகளினால் தான் வலுவிழந்து அணையின் ஒரு பகுதி உடைந்ததாக கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. 

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், அமைச்சரின் வீட்டிற்குள் புகுந்து நண்டுகளை விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமைச்சரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close