ஆளுநர் மாளிகை முற்றுகை: சித்தராமையா, குலாம் நபி ஆசாத் கைது!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 03:38 pm
karnataka-crisis-siddaramaiah-gulam-nabi-asad-arrested

பெங்களூரு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்- மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதற்கு பாஜகவின் சதி வேலைகள் தான் காரணம் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா குற்றஞ்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், பெங்களூரு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு சதி செய்வதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா ஆளுநரை தனியே சந்தித்து மனு அளித்துள்ளார். கர்நாடக அரசியல் குழப்பத்தில் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close