மும்பையில் காங்கிரஸ் அமைச்சர் கைது!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 03:58 pm
karnataka-crisis-minister-sivakumar-arrested

மும்பை ரிசார்ட்டில் தங்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை காணச் சென்ற அமைச்சர் சிவக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்- மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூருவில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். 

அதே நேரத்தில் மும்பையில் காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை ரிசார்ட்டில் தங்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை காண போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். பா.ஜ.கவினரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாக கூறி அமைச்சர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். 

இதையடுத்து, தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றதால் அமைச்சர் சிவகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள மும்பை ரிசார்ட் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close