கர்நாடக ஆளுநரை சந்தித்து எடியூரப்பா கோரிக்கை மனு!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 03:27 pm
karnataka-crisis-yeddyurappa-meets-governor

கர்நாடக மாநில பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவை தனியே சந்தித்து மனு அளித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். மும்பையில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவை தனியே சந்தித்து மனு அளித்துள்ளார். "கர்நாடக அரசியல் குழப்பத்தில் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும். எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் உடனே ஏற்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க வற்புறுத்த வேண்டும்" என்று அவர் தனது மனுவில் ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close