கர்நாடகாவில் மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 04:44 pm
karnataka-crisis-two-more-congress-mlas-resigns-his-mla-post

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விடுமுறை முடிந்து நேற்று பேரவைக்கு  திரும்பய கர்நாடக சபாநாயகர், எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் ராஜினாமா கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று பதில் அளித்துள்ளார். 

தொடர்ந்து பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகிய இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். 

இதையடுத்து, கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 16 ஆக(காங்கிரஸ் - 13, மஜத -3) அதிகரித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close