நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 11:24 am
sonia-and-rahul-protest-in-parliament-complex

நாடாளுமன்ற  வளாகத்தில், பாஜக செயல்பாட்டை கண்டித்து முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உட்பட 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல் கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் ராஜினாமா செய்வதற்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாஜக செயல்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close