தோனி தயவு செஞ்சு ரிடையர் ஆகாதீங்க... அலறும் பிரபல பாடகி!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 05:16 pm
dhoni-please-dont-get-retired-latha-mangeshkar

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய விக்கெட் கீப்பரும், நம்பிக்கை நட்சத்திரமுமான மகேந்திர சிங் தோனி சர்வதே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தோனி, நாட்டிற்காக இன்னும் நிறைய விளையாட வேண்டும். இப்பாேதைக்கு ஓய்வைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கக்கூடாது என, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

இது குறித்து, பழம் பெரும், மூத்த பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தோனி அவர்களே, நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகிறது. தயவு செய்து. அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம். நாட்டிற்காக நீங்கள் இன்னும் நிறைய விளையாட வேண்டி உள்ளது. தற்போதைக்கு ஓய்வு பற்றி நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்’’ என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close