கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் இந்த நடிகைக்கும் காதல்? 

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 05:42 pm
bhumra-fall-in-love-with-actress-anupama

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. நடப்பு உலகக் கோப்பை தொடரில், எதிரணி வீரர்களை தன் பந்து வீச்சால் மிரட்டியவர் என்றால் மிகையாகாது. 25 வயதே ஆகும் பும்ராவுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகையாக உள்ளனர். 

இந்நிலையில், இளஞ்சிங்கம் பும்ராவுக்கும், பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுபமாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அனுபமாவும், 23 வயது இளம் ஹீரோயின். தன் கிரங்கடிக்கும் பார்வையாலும், மினுமினு மேனி அழகாலும் இளைஞர்களை தன் பக்கம் கட்டிப்போட்டவர். அதே போல், தன் புயல் போன்ற பந்து வீச்சால் எதிரணி வீரர்களை திணறடித்தன் மூலம், இளம் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பும்ரா. 

மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, அனுபமாவுக்கும், பும்ராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. குஜராத்தை பூர்வீகமாக கொண்ட பும்ரா, தென் மாநிலத்தை சேர்ந்த அனுபமாவை விரைவில், தென்னிந்திய முறைப்படி திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close