அதிகாரம் யாருக்கு? கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 01:09 pm
sc-dismissed-kiranbedi-s-plea

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், புதுச்சேரி அரசின் முடிவுகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று கூறி கடந்த 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து, ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிய நிலையில், உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையின் தீர்ப்பை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்றும் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, ஆளுநர் கிரண்பேடிக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close