கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்குத் தடை! - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 01:41 pm
karnataka-crisis-sc-to-hear-rebel-mlas-plea-on-tuesday

கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் கர்நாடக அரசியல் சூழலில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக 14 எம்.எல்.ஏக்கள் கடந்த வாரமே தங்களது ராஜினாமா மனுக்களை அளித்தும், அதுகுறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, 10 எம்.எல்.ஏக்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

தொடர்ந்து வழக்கின் விசாரணையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் சபாநாயகர் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரிடம் பேசிய வீடியோ மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, இன்றைய வழக்கின் விசாரணையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து வழக்கின் வருகிற செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 16) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது, வருகிற 16ம் தேதி வரை ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யவோ, ராஜினாமா மனுக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கக்கூடாது என்றும் அரசியல் சாசன விவகாரம் என்பதால் வழக்கை முழுமையாக ஆய்வு செய்து விசாரிக்க வேண்டியிருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close