அமர்நாத் யாத்திரை தற்காலிமாக நிறுத்தம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 12:48 pm
amarnath-yatra-suspended-temporarily-in-jk

தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய அப்துல் காதீர் 1931ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சிறைக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில், போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 13ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். 

அதன்படி இன்று ஜூலை 13ம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு கருதி இன்றைய யாத்திரை  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

46 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்பதற்காக 1.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு மட்டும் 13,555 பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close