உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக இந்தியர் நியமனம்!

  முத்துமாரி   | Last Modified : 13 Jul, 2019 01:24 pm
india-s-anshula-kant-is-world-bank-md-and-cfo

உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக உலக வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி என்ற பெருமையை அன்சுலா பெறுகிறார். 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சுலா காந்த், கடந்த 35 ஆண்டுகள் வங்கித்துறையில் அனுபவம் பெற்றவர். தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். கடந்த 1983ம் ஆண்டு முதல் ஸ்டேட் பேங்கில் பொது மேலாளர் பதவியில் இருந்து தற்போது தலைமை நிதி அதிகாரி வரை பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

35 ஆண்டுகளாக வங்கித்துறையில் அன்சுலா ஆற்றிய பணிகளை கொண்டு, உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக அவரை தேர்ந்தெடுத்ததாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். 

முதல்முறையாக  உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி என்ற பெருமையும் இவரையே சாரும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close