டெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 03:48 pm
3-dead-in-major-fire-at-rubber-factory-in-delhi-search-and-rescue-ops-on

டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

டெல்லி ஜில்மில் காலனியில்(Jhilmil Colony) உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்தும் பணியில் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. மீட்புப்பணியில் 3 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close