காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்; அமைச்சரவையில் மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 04:41 pm
after-cm-drops-4-ministers-bjp-leader-3-congress-defectors-join-goa-cabinet

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து கோவா பாஜக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக பாஜகவில் இணைந்த 10 பேரில் 4 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவராக இருந்த சந்திரகாந்த் கவேல்கருக்கு துணை முதல்வர் பதவியும், துணை சபாநாயகராக இருந்த மைக்கேல் லோபோ, ஜெனிபர், நேரு ருத்ரிகியாஸ் ஆகியோருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், பாஜகவின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் விஜய் சர்தேசாய், நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயேஷ் சல்கோங்கர் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் மிர்துலா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வின் போது அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close