ஜூலை 16ம் தேதி திருப்பதி கோவிலில் தரிசனம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 09:39 am
darshan-cancels-at-tirupati-temple-on-july-16

திருப்பதி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு வருகிற ஜூலை 16ம் தேதி அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை16 நள்ளிரவு 1.14 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சுத்தம் செய்யும் பணிகளுக்காக ஜூலை 16 காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னர் கிரகணத்தை முன்னிட்டு அன்று மாலை 7 மணி முதல் மறுநாள்(ஜூலை 17) காலை 5 மணி வரையும் கோவில் மூடப்படும். இந்த நேரங்களில் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 17ம் தேதி காலை கோவில் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close