கர்நாடகா, கோவாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கட்சித்தாவல்?

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 10:08 am
tmc-mlas-to-be-join-in-bjp-very-soon-mukul-roy

கர்நாடக மற்றும் கோவா மாநிலங்களை அடுத்து, மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 18 தொகுதிகளில் தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதன்மூலமாக முதல்முறையாக மேற்குவங்கத்தில் கால்பதித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது பாஜக.  

இந்நிலையில், கர்நாடக மற்றும் கோவா மாநிலங்களை அடுத்து, மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த முகுல் ராய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இதனால், கர்நாடகா மாநிலத்தைத் தொடர்ந்து மேற்குவங்க அரசியல் சூழலிலும் பதற்ற நிலை நிலவுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close