திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் குடியரசுத்தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 11:34 am
president-ramnath-kovind-at-tirupati

நேற்று காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். 

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக நேற்று சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று பிற்பகல் காஞ்சிபுரம் சென்றார். மாலை 3 மணியளவில் தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் சென்னை திரும்பினார்.

தொடர்ந்து, சென்னையில் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். 

அதன்பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் மற்றும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருப்பதி சென்று தங்கினார். 

இன்று காலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இன்று மாலை வரை திருப்பதியில் இருந்து திருமலா தேவஸ்தான நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close